Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிராவில் காலியாகும் 2 மாநிலங்களவை இடங்கள்… அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா வேட்புமனுத் தாக்கல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிராவில் காலியாகும் 2 மாநிலங்களவை இடங்கள்… அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா வேட்புமனுத் தாக்கல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில்  தேசியவாத காங்கிரஸ் சார்பில் பாராமதி தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியிட்டார். எனினும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுப்ரியா சுலே-விடம் அவர் தோல்வியைத் தழுவினார். இதனால், அஜித் பவார் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவைக்கு இரண்டு பேரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுனேத்ரா பவார் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

விளம்பரம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம்பேசிய மாநில அமைச்சரும், மூத்த தலைவருமான சஜன் புஜ்பால், தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருந்தபோதிலும், கட்சித் தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசியலை பொறுத்த அளவில் சரத்பவார் தலைமையில் ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அவரது உறவினர் அஜித் பவர் தலைமையில் இன்னொரு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் செயல்பட்டு வருகிறது.

இதேபோன்று சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே என 2 தலைமைகளை கொண்ட 2 கட்சிகளாக செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடனும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – தண்ணீர் கேன்களுக்கு மட்டும் மாதம் இத்தனை ஆயிரங்களா… மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்

இதில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோன்று பாஜக 9 இடங்களிலும், சிவசேனா கட்சி (ஏக்நாத் ஷிண்டே) 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இந்த தேர்தலில் தனது உறவினரான சுப்ரியா சுலேவிடம் அதாவது சரத் பவாரின் மகளிடம், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தோல்வியடைந்தார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

விளம்பரம்

.



.

Previous Post

புதுச்சேரி மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி – இனி இந்த இடம் தான் புதுச்சேரி பேருந்து நிலையம்! | Pondicherry bus stand is under construction – new Puducherry bus stand is AFT ground for time being

Next Post

PM Modi:’தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை-make tech creative and not destructive says pm modi at g7 summit

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
PM Modi:’தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை-make tech creative and not destructive says pm modi at g7 summit

PM Modi:'தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை-make tech creative and not destructive says pm modi at g7 summit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In