விமான விதிமீறல்களின் தொடர் சம்பவங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது. டிஜிசிஏ ஒரு அறிக்கையில், சில நீண்ட தூர முக்கியமான வழித்தடங்களில் பாதுகாப்பு மீறல்கள் நடந்ததாகக் கூறியது.
விசாரணையில் முதன்மையான பார்வையில் விமான நிறுவனம் இணங்கவில்லை எனத் தெரியவந்ததால், ஏர் இந்தியாவுக்குக் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவால் இயக்கப்படும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள் தொடர்பான பாதுகாப்பு அறிக்கை இது என்ற குறிப்பிட்டுள்ளது..
“குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை / OEM செயல்திறன் வரம்புகளுக்கு இணங்கவில்லை என்பதால், DGCA அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது மற்றும் ஏர் இந்தியா மீது 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது” என்று DGCA அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இண்டிகோவிற்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது
இணையத்தில் பரவிய ஒரு வைரல் வீடியோ காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனம் அபராதம் விதித்த ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் பயணிகள் சாப்பிடும் வீடியோ தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஜனவரி 17 அன்று DGCA (Directorate General of Civil Aviation) மற்றும் BCAS (Bureau of Civil Aviation Security) ஆகியவை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தன. BCAS நிறுவனம் IndiGo நிறுவனத்திற்கு 1.20 கோடி ரூபாய் அபராதம் விதித்த நிலையில், DGCA விமான நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
மும்பை விமான நிலையத்திற்கு DGCA மற்றும் BCAS ஆகியவை ரூ.90 லட்சம் அபராதம் விதித்தன. விமான நிலையத்திற்கு BCAS மூலம் ரூ.60 லட்சம் மற்றும் DGCA மூலம் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. செவ்வாயன்று, வைரலான வீடியோ தொடர்பாக BCAS இண்டிகோ மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியது.

