முதலமைச்சர் தனது உரையில், நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை போலவே, வக்ஃப் சட்ட திருத்தமும் அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது என்றும் குறிப்பிட்டார். 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டத்தில், 1995 மற்றும் 2013-ல் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் புதிய திருத்தங்கள், வக்ஃப் நிறுவனங்களின் சுயாட்சியை பறிப்பதாகவும், அரசு தலையீட்டை அதிகரிப்பதாகவும் உள்ளதாக அவர் விமர்சித்தார்.

