April 04, 20256:53 AM IST
Tamil Live Breaking News : வக்ஃபு மசோதா: எதிராக வாக்களித்த திமுக, அதிமுக
மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்பட அதிமுகவின் 4 எம்.பி.க்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் மசோதாவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் வாக்களித்தார்.
