Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ADMK: கட்சியினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 18, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK: கட்சியினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது…

“கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்!

கழக நிறுவனத் தலைவர் “பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

குருகிராம் முதல் லண்டன் வரை பண மோசடி: வதேராவை சுற்றி வளைக்கும் 3 வழக்குகள்.. குற்றப்பத்திரிகையுட

Next Post

புனித வெள்ளி: பிரதமர் மோடி வாழ்த்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புனித வெள்ளி: பிரதமர் மோடி வாழ்த்து

புனித வெள்ளி: பிரதமர் மோடி வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In