Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மிரளும் வல்லரசுகள்” இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 25, 2025 5:45 PM IST

இந்தியாவிலேயே முதன்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. வல்லரசுகளுக்கு சவால் விடும் இந்த சோதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணைரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை
ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்த ஏவுகணைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன. தொடர்ந்து, அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் டிஆர்டிஓ, வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில், அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து அசத்தியுள்ளது,

முதன் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அக்னி-1, அக்னி-2 வரிசையில், மேம்படுத்தப்பட்ட பதிப்பான அக்னி பிரைம் எடை குறைவாகவும், கையாள எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ரயில், சாலை போன்ற பல்வேறு தளங்களில் இருந்தும் ஏவும் வகையில், சிறப்பு மிக்க நகரும் ஏவுதள அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கேனிஸ்டர் எனப்படும் சிறப்பு கொள்கலனில் இந்த ஏவுகணை வைக்கப்பட்டுள்ளதால், இதனை ரயில்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் எளிதாக ஏற்றிச் செல்ல முடியும்.

இத்தகைய சிறப்புவாய்ந்த திட்டத்திற்கு சோவியத் யூனியன் தான் முன்னோடி. 1980-களில், RT-23 Molodets என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ரயில் அடிப்படையிலான அமைப்பில் சோவியத் யூனியன் நிலைநிறுத்தியது. பனிப்போர் சமயத்தில், அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தங்கள் அணு ஆயுத ஏவுகணைகளை மொபைல் கேனிஸ்டர் அமைப்பில் வைத்து ரயில்களிலும், சாலைகளிலும் நகர்த்தி வந்தது சோவியத் யூனியன்.

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை

தாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 1980களில் ‘Peacekeeper Rail Garrison’ என்ற திட்டத்தின் கீழ், சுமார் 25 ரயில்களை உருவாக்கியது அமெரிக்கா. அச்சுறுத்தல் அதிகரிக்கும்போது, ராணுவத் தளங்களிலிருந்து வெளியேறி, மற்ற ரயில்களுடன் இந்த ரயில்கள் ஒன்றாக பயணிக்கும். இதன் மூலம், ஏவுகணைகளின் இருப்பிடத்தைக் எதிரி நாடுகள் கண்டறிவது தடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சீனாவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் DF-41 ஏவுகணைகளை கேனிஸ்டர் அமைப்பில் வைத்து வெற்றிகரமாக சோதித்தது. ரயில் அடிப்படையிலான ஏவுகணை சோதனைகளில், தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் வடகொரியா, கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து ரயிலில் இருந்து ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியது.

பாதுகாப்புத் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில், அதற்கு நிகராக இந்தியாவும் தற்போது அக்னி ஏவுகணையை ஏவியுள்ளது. உள்நாட்டிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல் என்றே கூறலாம்…

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 4:50 PM IST



.

Previous Post

சமூக ஆர்வலர் வாங்க்சுக் அமைப்பின் வெளிநாட்டு நிதி உரிமம் ரத்து!

Next Post

‘வெள்ளைக் காகிதம் காட்டிய டி.ஆர்.பி.ராஜா..’ எவ்வளவு ஏத்தம் என எடப்பாடி பழனிசாமி காட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘வெள்ளைக் காகிதம் காட்டிய டி.ஆர்.பி.ராஜா..’ எவ்வளவு ஏத்தம் என எடப்பாடி பழனிசாமி காட்டம்!

‘வெள்ளைக் காகிதம் காட்டிய டி.ஆர்.பி.ராஜா..’ எவ்வளவு ஏத்தம் என எடப்பாடி பழனிசாமி காட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In