Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீண்டும் மல்யுத்த போராட்டம்: சாக்சி, பஜ்ரங் மிரட்டல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 15, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மீண்டும் மல்யுத்த போராட்டம்: சாக்சி, பஜ்ரங்  மிரட்டல்
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: ”இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக மீண்டும் போராடுவோம்,” என சாக்சி மாலிக் தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ்பூஷண் ஷரண் சிங் மீது, பாலியல் புகார் கூறப்பட்டது. இவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராடினர்.

தவிர, நிர்ணயித்த காலத்திற்குள் தேர்தல் நடத்தாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, கடந்த 2023, ஆக. 25ல் சர்வதேச அமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,) தடை விதித்தது. இதனிடையே புதிய தலைவராக, பிரிஜ்பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வானார். இதற்கு பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு, மல்யுத்த கூட்டமைப்பை கடந்த டிச. 27ல் சஸ்பெண்ட் செய்தது. மல்யுத்தத்தை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை யு.டபிள்யு.டபிள்யு., நீக்கியது.

சாக் சி மாலிக் வெளியிட்ட செய்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு தவறான வழிகளை சஞ்சய் சிங் பயன்படுத்தியுள்ளார். எங்களது போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது. மல்யுத்தத்தில் இருந்து நான் ஓய்வு பெற்றாலும், பிரிஜ்பூஷண், அவரது ஆதரவாளர்கள் வீராங்கனைகளுக்கு தொல்லை கொடுப்பதை, மல்யுத்த சங்கத்தை நிர்வகிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டேன். மத்திய அரசு எங்களுக்கு உறுதி தர வேண்டும். இல்லை எனில் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பிரிஜ்பூஷண் மகன் தலைவர்

பஜ்ரங் புனியா கூறுகையில்,” பிரிஜ்பூஷண் குடும்பத்தினர், உறவினர் யாரும் மல்யுத்தத்தில் தலையிட மாட்டர் என மத்திய அரசு உறுதி தருகிறது. ஆனால், சில நாளுக்கு முன் இவரது மகன், உ.பி., சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.

.

Previous Post

‘மோடி பஞ்சாப் வந்தால், அவர் தப்பிக்க மாட்டார்’, டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் மிரட்டல்.

Next Post

இரட்டை குழந்தைகளுடன் கேரள தம்பதி அமெரிக்காவில் மர்ம தற்கொலை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இரட்டை குழந்தைகளுடன் கேரள தம்பதி  அமெரிக்காவில் மர்ம தற்கொலை..

இரட்டை குழந்தைகளுடன் கேரள தம்பதி அமெரிக்காவில் மர்ம தற்கொலை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In