Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே போக்குக்காட்டிய குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுகமான குர்பாஸ் அடித்த ஏழாவது சதம் இதுவாகும்.

The moment he brought up his 7th ODI hundred – @RGurbaz_21! #AfghanAtalan | #AFGvSA | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/S7e98ilU6V

— Afghanistan Cricket Board (@ACBofficials) September 20, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரது முதல் சதமாக பதிவானது. இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் அவர் அடித்த இரண்டாவது சதமாகும்.

23 வயதை எட்டுவதற்கு முன்பு பல சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் குர்பாஸும் இணைந்துள்ளார்.

இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தங்களின் 23-வது பிறந்தநாளுக்கு முன்னதாக தலா எட்டு சதங்களுடன் பட்டியலில் இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.

இருப்பினும், குர்பாஸ் இப்போது விராட் கோலியின் சாதனையுடன் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பாபர் அசாம் மற்றும் உபுல் தரங்கா இருவரும் 6 சதங்கள் அடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால் ஒட்டுமொத்த சாதனையை குர்பாஸ் சமன் செய்ய முடியும் என்றாலும், அவர் அதை முறியடிக்க வாய்ப்பில்லை. நவம்பர் 28 ஆம் தேதி அவருக்கு 23 வயதாகிறது. அதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எந்த ஒருநாள் போட்டிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அவர் இப்போது ஆப்கானிஸ்தான் சார்பில் ஒட்டுமொத்தமாக அதிக சதமடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது ஷேசாத் உள்ளார்.

23 வயதிற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள்

  • குயின்டன் டி காக் – 8

  • சச்சின் டெண்டுல்கர் –  8

  • விராட் கோலி – 7

  • ரஹ்மானுல்லா குர்பாஸ் –  7

  • பாபர் அசாம் – 6

  • உபுல் தரங்கா –  6

  • அகமது ஷெஹ்சாத் –  5

  • ஷிம்ரன் ஹெட்மயர் – 5

  • இப்ராஹிம் ஜட்ரன் –  5

  • பால் ஸ்டெர்லிங் –  5





.

Previous Post

நாட்டையே உலுக்கிய திருப்பதி லட்டு விவகாரம்.. திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

Next Post

ரஷ்யா: போரில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இந்தியர்கள்… என்ன நடக்கிறது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரஷ்யா: போரில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இந்தியர்கள்… என்ன நடக்கிறது?

ரஷ்யா: போரில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இந்தியர்கள்... என்ன நடக்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In