Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜெயலலிதா வழக்கில் ஜாமீன் வாங்கித்தந்த சட்ட நிபுணர் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2024
in Default
0
ஜெயலலிதா வழக்கில் ஜாமீன் வாங்கித்தந்த  சட்ட நிபுணர் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் பிரபல சட்ட நிபுணருமான வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் முதுமை காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

ஃபாலி நாரிமன் உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞர்.  உச்சநீதி மன்றத்தின் முதுபெரும் வழக்கறிஞரான இவர் 1950 ல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். பல உயரிய பதவிகளை வகித்த ஃபாலி நாரிமன், 1999ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினரானார்.

நீதித்துறையிலும், அரசியல் துறையிலும் அவருடைய கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில்  அவர் அதிக அக்கறை செலுத்தினார்.

1972 மே முதல் 1975 ஜூன் வரை இந்திய கூடுதல் ஜெனரலாக பதவி வகித்தவர், அப்போது  நெருக்கடி நிலையை இந்திய அரசு பிறப்பித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பதவியிலிருந்து விலகினார். 1976ம் ஆண்டில் அரசியல் சட்ட 42 ம் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதனை எதிர்த்தார். அரசியல் துறைக்கும், நீதித்துறைக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களிலும், ஊழல் ஒழிப்பு, நதிநீர் சிக்கல் போன்ற விஷயங்களிலும் தமது  சட்ட ஆலோசனைகளை அரசுக்கு அவர் வழங்கியுள்ளார். 

பார்சி இனத்தைச் சேர்ந்த நரிமன் 1955ல் பாப்சி காண்ட்ராக்டர் என்னும் பெண்மணியை மணந்தார். இவரது மகன் ரோகிண்டன் ஃபாலி நாரிமன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இவர் வாதிட்டார். ஆனாலும் தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைத்தது. மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. முதுமை மற்றும் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது 95வது வயதில் இன்று அதிகாலை  அவர் மரணம் அடைந்தார். இது இந்திய சட்ட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

விவசாயிகளை விரட்டியடிக்கும் மத்திய அரசு.. டெல்லி எல்லையில் மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

Next Post

திமுக கூட்டணி உடையும்.. பொறுத்திருந்து பாருங்க… பரபரப்பை கிளப்பிய ஈ.பி.எஸ்.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக கூட்டணி உடையும்.. பொறுத்திருந்து பாருங்க… பரபரப்பை கிளப்பிய ஈ.பி.எஸ்.!!

திமுக கூட்டணி உடையும்.. பொறுத்திருந்து பாருங்க... பரபரப்பை கிளப்பிய ஈ.பி.எஸ்.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In