Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஆலோசனை கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்த தமிழக குழு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2025
in அரசியல் செய்திகள்
0
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஆலோசனை கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்த தமிழக குழு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தில் எம்.பி.,-க்களைக் கொண்ட தென் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களை சந்திக்க திமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்லா ஆகியோர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்துப் பேசினர். தென் மாநில அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தனர். அப்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தொகுதி மறுசீரமைப்பு மட்டுமின்றி, தென் மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரையும், அமைச்சர் பொன்முடி, எம்.பி., அப்துல்லா ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இதையும் படிங்க : தொகுதிக்காக முக்கிய கோரிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மனு அளித்த கனிமொழி எம்.பி

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக கர்நாடக தரப்பில் உறுதி அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்பின்னர், ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தார்.

இதேபோல, டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரையனை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி சோமு, சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

First Published :

March 12, 2025 5:19 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஆலோசனை கூட்டம் : கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்த தமிழக குழு!



.

Previous Post

நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

Next Post

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In