பொன்முடியை அமைச்சராக நியமிக்காத தமிழக ஆளுநரை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறுகையில் அட்டர்னி ஜெனரல் அவர்களே உங்கள் கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். நாம் சில தீவிர முடிவுகளை எடுக்க நேரிடும் . தயவு செய்து உங்கள் ஆளுநரிடம் சொல்லுங்கள், உச்சநீதிமன்றம் இதை தீவிரமாகப் பார்க்கிறது என்றார்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகளை நியாயப்படுத்த விரும்பவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். இதிலிருந்து ஆளுனரை மத்திய அரசு அந்த அளவிற்கு சப்போர்ட் செய்யவில்லை என்று தெரிகிறது.


பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படுவதால் கவர்னருக்கு கண்டனங்கள் ஆளும் திமுக அரசும் தெரிவிக்கிறது நீதிமன்றமும் தெரிவித்துள்ளது ஆனால் சாதாரண குடிமக்களின் புகார் மனுக்கள் இதே தமிழக அரசு அதிகாரிகளிடம் மூன்று வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது இதை முதலமைச்சரும் கேட்பதில்லை எந்த ஒரு நீதிமன்றமும் இதை கேட்க மறுக்கிறது அதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை. இதில் என்ன மர்மம் உள்ளது சாதாரண குடிமக்கள் அதிகாரம் இல்லாத பண பலம் இல்லாத நபர்கள் என்பதால் தான்