Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ADMK: "அந்தப் பேச்சுக்கே இடமில்லை" – 'அதிமுக இணைப்பு' குறித்துப் பேசிய ஓ.பி.எஸ்-க்கு இ.பி.எஸ் பதிலடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2024
in அரசியல் செய்திகள்
0
ADMK: "அந்தப் பேச்சுக்கே இடமில்லை" – 'அதிமுக இணைப்பு' குறித்துப் பேசிய ஓ.பி.எஸ்-க்கு இ.பி.எஸ் பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., பல அணிகளாகப் பிரிந்தது. 2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்த நிலையில், 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ், ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகிய நால்வரும் கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். தற்போது அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓ.பி.எஸ் செயல்பட்டு வருகிறார்.

ஓபிஎஸ்

இதற்கிடையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அ.தி.மு.க., 2025 டிசம்பருக்குள் இணையும். எடப்பாடி பழனிசாமி உள்பட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. 2026-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிதான் அமையும்.” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தபடி அ.தி.மு.க., மீண்டும் மலரும். சசிகலா, டி.டி.வி தினகரன் உள்பட அ.தி.மு.க., அணிகள் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை.” எனத் தெரிவித்து இணைப்பு கருத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில்தான் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். சென்னை முகப்பேர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.,வின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

எடப்பாடி பழனிசாமி

அப்போது, “எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகத் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், கட்சியில் எனக்கு ஒருவர் கூட எதிர்ப்பில்லை. எங்கள் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது. அ.தி.மு.க., இணையும் எனத் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால், உறுதியாக அ.தி.மு.க., இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். கட்சியை அழிக்க நினைத்தவர்கள் இன்று அடியோடு அழிந்து போயிருக்கிறார்கள். எனவே பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதி முடிவு என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

2026 தேர்தல் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். அந்தத் தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திப்போம். இப்போது தி.மு.க., கூட்டணியில் புகைய ஆரம்பித்து விட்டது. விரைவில் அந்தக் கூட்டணிக்குள் தீப்பிடிக்கும். கூட்டணி இல்லையென்றால், தி.மு.க.,வே கிடையாது. எனவே, 2026-ல் அ.தி.மு.க., ஆட்சியை அமைக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

NCP: “அஜித்பவார் அணியிடமிருக்கும் கடிகார சின்னத்தை முடக்குங்கள்” – சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனு



.

Previous Post

வருமானவரித் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Next Post

Tamilnadu News Live September 22, 2024: TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 22 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 22, 2024: TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 22 2024

Tamilnadu News Live September 22, 2024: TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 22 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In