Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அடேங்கப்பா.. 39 மனைவிகள், 94 குழந்தைகள்.. உலகின் மிகப்பெரிய குடும்பம் இதுதான்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 23, 2025
in அரசியல் செய்திகள்
0
அடேங்கப்பா.. 39 மனைவிகள், 94 குழந்தைகள்.. உலகின் மிகப்பெரிய குடும்பம் இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 22, 2025 7:50 AM IST

100 அறைகளைக் கொண்ட இந்த வீடு, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வசதியாக தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

News18News18
News18

வடகிழக்கு மாநிலமான மிசோரமில், உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான, நூறு அறைகள் கொண்ட ஒரு பரந்த மாளிகை உள்ளது. இந்த குடும்பத்தின் மையமாக இருப்பவர் சியோனா சனா. இவர் வியக்கத்தக்க வகையில் 39 முறை திருமணம் செய்து கொண்டுள்ளதோடு, 94 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். இவரது குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை விட, அதனுள் இருக்கும் நல்லிணக்கம் குறிப்பிடத்தக்கது.

ஆம்.. 39 மனைவிகளும் சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். 2021-ல் காலமான சியோனா சனா, இவ்வளவு சிக்கலான வீட்டிற்குள் அமைதியையும் ஒழுங்கையும் பராமரித்த திறனுக்காக உலகளவில் கவனம் பெற்ற நபராக ஆனார். கிட்டத்தட்ட 40 மனைவிகளின் தேவைகளையும், அவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்தும் கலையில் மிகுந்த தேர்ச்சி பெற்றுள்ளவராக தெரிகிறார் சியோனா. இவரது குடும்பத்தின் வாழ்க்கை முறை மிகவும் அசாதாரணமானது. அதனால் தான் என்னவோ, உலகம் முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

1945-ம் ஆண்டு பிறந்த சியோனாவுக்கு 17 வயதில் முதல் திருமணம் நடந்தது. அடுத்த பல தசாப்தங்களில், அடுத்தடுத்து திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், அவரது மனைவிகள் அமைதியாக ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, இவ்வளவு பெரிய வீட்டை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். இந்தக் குடும்பம், “புதிய தலைமுறை வீடு” என்று பொருள்படும், “சுவான் தார் ரன்” என்ற நான்கு மாடிக் கட்டடத்தில் வசித்து வருகின்றனர்.

100 அறைகளைக் கொண்ட இந்த வீடு, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வசதியாக தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி படுக்கை வசதிகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பொதுவான இடங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அனைவரும் கிட்டத்தட்ட சகோதரிகளை போலவே வாழ்ந்து வருகிறார்கள். சியோனாவின் குழந்தைகளின் எண்ணிக்கையில் சில மாறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் 89 என்றும், சிலர் 94 என்றும் கூறுகிறார்கள்.

இவர்களோடு சேர்த்து, குடும்பத்தில் 36 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர்களும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வசித்து வருகின்றனர். தினசரி உணவு தொழிற்சாலைக்கு நிகரான அளவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இவர்களது குடும்பம் கிட்டத்தட்ட ஒரு தன்னிறைவு பெற்ற சமூகத்தைப் போலவே இயங்குவதாக கூறப்படுகிறது. 2021-ல் சியோனாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பம் இன்றும் ஒற்றுமையுடன் தொடர்ந்து ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

First Published :

March 22, 2025 7:50 AM IST



.

Previous Post

Tamilnadu News Live March 22, 2025: ‘சிலிண்டருக்கு ரூ.30 கூடுதல் வசூல்.. ரூ.3200 கோடி மோடி அரசு ஊழல்’ கோவையில் திமுக போஸ்டர்!

Next Post

தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In