Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போதையா இருக்குமாமே.. ரம் + ராஸ்பெர்ரி சுவை! நாம் வாழும் பிரபஞ்சத்தின் டேஸ்ட் இதுதான்.. சுவாரசியம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 21, 2023
in அரசியல் செய்திகள்
0
போதையா இருக்குமாமே.. ரம் + ராஸ்பெர்ரி சுவை! நாம் வாழும் பிரபஞ்சத்தின் டேஸ்ட் இதுதான்.. சுவாரசியம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Halley Karthik
Published: Wednesday, June 21, 2023, 22:00 [IST]
சென்னை: வானம் யாருக்குதான் பிடிக்காது? ஆனால் இந்த வானத்தில் இருக்கும் விண்வெளி என்பது நாம் நினைத்து பார்ப்பதை விட அபாயகரமானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? விண்வெளி எப்படிப்பட்ட ஆபத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்பதை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். நீல வானம் உண்மையில் மிகவும் நீளமாகத்தான் இருக்கிறது. வானம் பற்றி எழுதாத கவிஞர்களே கிடையாது. வானமும், நிலவும் இல்லையெனில் காதலர்கள் உவமைக்காக மிகவும் மெனக்கெட்டிருப்பார்கள். இப்படியாக வானம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கிறது. அனைவரும் வானத்தை நேசிக்கின்றோம். ஆனால், இயற்கை நாம் நினைப்பதை விட மிகவும் கொடியது என்பதுதான் யதார்த்தம். வானமும் இதற்கு விதிவிலக்கல்ல. மனிதர்கள் விண்வெளியில் பறந்த வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாமும் எப்போதாவது இப்படி பறந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். கார்ட்டூன்களில் காட்டப்படுவதை போல எந்த பாதுகாப்பு உடைகளும் அணியாமல் விண்வெளியில் பறக்க யாருக்குதான் ஆசை இருக்காது. இந்த கற்பனைகள் எல்லாம் ஒருபோதும் நிஜமாகாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது விண்வெளி குறித்து நாம் இதுவரை தவறாக புரிந்துக்கொண்ட விஷயங்களையும் விளக்கியுள்ளனர். முதல் விஷயம் நிலவு குறித்து நமக்குள் இருக்கும் தவறான கருத்து. நல்ல, நிலவு போல வட்டமான முகம் என்று குழந்தைகளை பார்த்து நாம் சொல்வதுண்டு. உண்மையில் நிலவு வட்டமானது கிடையாது. அது எலுமிச்சை பழம்போல இருக்கிறது. அதாவது அதன் பூமத்திய ரேகையில் உள்ள பகுதி லைட்டாக வீங்கி இருக்கிறது. அதேபோல நம் ஒவ்வொருவருக்கும் சுவை பற்றி நன்கு தெரியும். ஆனால் எப்போதாவது நமது பூமி எந்த டேஸ்டில் இருக்கும் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பூமியை விடுங்கள் இந்த பிரபஞ்சம் எந்த டேஸ்டில் இருக்கும் தெரியுமா? இதற்கான விடை கடந்த 2009ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதாவது இந்த பிரபஞ்சம் ராஸ்பெர்ரி பழத்தின் சுவையையும், ரம், சாராயத்தின் வாசனையையும் கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். என்ன மக்களே டேஸ்ட் பார்க்க ரெடியா? இந்த பிரபஞ்சத்தில் உள்ள மேகங்களில் எத்தில் ஹால்கஹால் அதிக அளவில் இருக்கிறது. இதுதான் இந்த சுவைக்கு காரணம். இந்த மேகங்களை வைத்து பூமியில் உள்ள அனைவருக்கும் அடுத்த 100 கோடி வருடங்களுக்கு ஃப்ரீ பீரை கொடுக்க முடியும். ஆனால் இந்த மேகங்களில் லைட்டாக ஹைட்ரஜன் சயனைடும் கலந்திருக்கிறது. எனவே இந்த பீரை சாப்பிட்ட பின்னர் அடுத்த நாள் காலையில் தலைவலி கொஞ்சம் ஓவராக இருக்கும். அதேபோல மற்றொரு தவறான புரிதல் ஸ்பேஸ் சூட் பற்றி இருக்கிறது. விண்வெளியில் பயணிப்பவர்களின் ஸ்பேஸ் சூட் கிழிந்துவிட்டால் அவர்கள் உடனடியாக இறந்துவிடுவார்கள் என்று புரிந்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் விண்வெளியில் உயிரிழக்க குறைந்தது இரண்டு நிமிடங்கள் வரை தேவைப்படும். ஸ்பேஸ் சூட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் முதல் 10 விநாடிகளில் நீங்கள் சுய நினைவை இழந்துவிடுவீர்கள். இந்த விண்வெளி ஆச்சரியங்கள் வரிசையில் நாம் தவறாக புரிந்துக்கொண்டுள்ள மற்றொரு விஷயம் ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகள்தான். இது அனைத்தையும் இழுத்து தனக்குள் போட்டுக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதில் உண்மை கிடையாது. ப்ளாக் ஹோல் அருகில் சென்றால் கூட எந்த பொருளையும் இழுத்துக்கொள்ளாது. மாறாக, அதற்கென ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டும் போதுதான் இது ஒளி உள்ளிட்ட அனைத்தையும் இழுத்துக்கொள்கிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Who doesn’t like the sky? But can you believe that this space in the sky is more dangerous than we think? Scientists have explained the dangers that space entails.
Story first published: Wednesday, June 21, 2023, 22:00 [IST]

.

Previous Post

தமிழகத்தில் ரூ.10 லட்சம் – ரூ.10 கோடி ஆண்டு வருவாய் வரும் கோயில்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்வு: சேகர்பாபு தகவல்

Next Post

ரவுடி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது – தனிப்படை போலீஸார் அதிரடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரவுடி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது - தனிப்படை போலீஸார் அதிரடி

ரவுடி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது - தனிப்படை போலீஸார் அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In