Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டிசம்பர் 2 – நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த தினம்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டிசம்பர் 2 – நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த தினம்…
126
SHARES
204
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

1960ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பெலுருவில் வருமையின் பிடியிலிருந்த ஒரு ஏழையின் குடும்பத்தில் முதல் பெண்ணாய் பிறந்தார்.

*அவரது இயற்பெயர் விஜயவாடா விஜயலட்சுமி

*அவர் தமிழில் வண்டிச்சக்கரம் கவர்ச்சி நடிகையாய் அறிமுகமானார் .

*200 தமிழ் படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர்.

*அவரது திரைப்படங்களில் மூன்றுமுகம் , மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை ,போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது .

*அவர் நடித்த லயனம் ( மலையாளம் ) திரைப்படம் , இன்றைய ஷகிலா திரைப்படங்களின் முன்னோடி எனக்கூறலாம் , அதுவே அவ்வகையில் வந்த முதல் திரைப்படமும் ஆகும்.

*ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் கூட சில்க்கின் ஒரு பாடலாவது இணைத்தால்தான் படத்தை வாங்குவோம் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் .

*ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமின்றி பல நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் , சில்க் ஸ்மிதா.

  • சில்க் நடித்த படங்களில் அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர் ஹேமா மாலினி என்னும் டப்பிங் கலைஞர் , அந்த குரல் சாதாரணமாக மறக்கக்கூடியதா!! என்ன…

*சமீபத்தில் அவரது கடைசி திரைப்படத்தை இயக்கிய திருப்பதிராஜா என்னும் இயக்குனர் சில்க் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் , அவரது புத்தகத்தில் இது குறித்து கூறுவதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் .

*தனது திரையுல ஆரம்ப காலங்களில் பலராலும் சக திரைப்பட நண்பர்களாலும் பல விதங்களிலும் அவமானங்களை அனுபவித்திருந்தாலும் தான் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கையில் அதை மறந்து பல உதவிகளை செய்தவர்.

*பல ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் அவர் கடித்து போட்ட ஆப்பிளை விளையாட்டாக ஒரு உதவி இயக்குனர் ஏலமிட அது 15 வருடங்களுக்கு முன்னாலேயே ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றதாம்.

*கடைசியாக நடித்த திரைப்படம் தங்கத்தாமரை

*அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சுபாஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுவார் , அப்பாடலின் கடைசியில் அவர் ஒரு தீ போன்ற ஒரு இடத்திற்குள் நுழைவதாய் காட்சியமைந்தது வருத்தமான உண்மை . அவர் இறக்குமுன் நடித்திருந்த காட்சி அது என்பது மேலும் வருத்தமளிக்கிறது .

1980களில் தமிழ்திரையுலகின் எல்லா திரைப்படங்களிலும் ஒரு காட்சியிலாவது சில்க் ஸ்மிதா இல்லாமல் இருந்ததில்லை ,

அவரது ஒரு பாடல் நடனமாவது எல்லா படங்களிலும் இருக்கும் , இன்று 35 வயதை கடந்த பலரது கனவுகன்னியாய் நிச்சயம் சில்க் ஸ்மிதா இருந்திருப்பார் , இன்றைய தலைமுறைக்கு சில்க்கின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில்க்கின் அபார நடனத்திறமையும் , கண்களின் வசீகரமும் தமிழ்திரையுலகம் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டு சென்றுள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது ,

சில்க்கை பற்றி வீட்டில் பேசத்தயங்கும் இன்றைய குடும்பஸ்தர்கள் பலரது மனிதிலும் இன்றும் சில்க் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் தேதி தமிழகத்தின் பல மத்திய வயதினருக்கும் அதிர்ச்சியளித்த தினம் , அடுத்த நாள் காலை செய்தித்தாளை பார்த்தவர்கள் பலருக்கும் மீளாத்துயரம் மனதில் குடிகொண்ட நாள் ..

தமிழ் திரையுலகின் பலரது உடல் தேவைகளுக்கும் பல முறை உதவியாய் இருந்து தன் வாழ்வைத்தொலைத்து , முதுமை குடிகொண்டு யாருமே கவனிக்கப்படா ஒரு சூழ்நிலை உருவாகும் தருவாயில் யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டு இறைவனடி சேர்ந்தார் சில்க் .

90களின் தொடக்கத்தில் டிஸ்கோ சாந்தி மற்றும் சில கவர்ச்சி நடிகைகளின் வருகையும் அதனால் ஏற்பட்ட புகழின் வீழ்ச்சியும் சில்க்கை அவரது கடைசி காலங்களில் பெரிதும் பாதித்திருந்தது .

புகழுடன் வாழ்ந்த பல நடிகைகளும் தங்கள் முதுமையில் சுயமிழந்து புகழிழந்து சுற்றம் இன்றி , ஆதரவு தர யாருமின்றி தன்னை வாழ்த்திய பலராலும் தூற்றப்படும் கொடுமை திரையுலகிற்கே உரித்தானது .

திரையுலகில் இன்றும் ஒரு பெண்ணை போதைப்பொருளாக பார்க்கும் வழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது , திரையுலம் போன்ற மீடியாக்கள் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒருபெண் இது போன்ற இன்னல்களை அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறாள் ,

இன்றைய சமூகம் பெண்ணை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதற்கு சில்க்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம் .

அவரைக்குறித்து ஆயிரமாயிரம் கதைகளும் , கிசுகிசுக்களும் வந்தாலும் எதையும் மறுக்காமல் எதற்கும் கவலையின்றி , பல இன்னல்களுக்கும் நடுவே வாழ்ந்து மறைந்தவர் சில்க் .

காலத்தால் மறுக்கப்பட்டு மறக்கப்பட்ட பல நூறு நடிகைகளில் என்றும் நம் உள்ளத்தில் நீங்க இடம் பிடித்தவர் சில்க்

Previous Post

திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் – தமிழகம், புதுவையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

Next Post

சஞ்சய் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சஞ்சய் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை..!

சஞ்சய் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In