100 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்தியப் பெண், மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக். சாக்ஷி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூசன் மல்யுத்த வீரர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவை தன்பக்கம் பார்க்க வைத்தவர்.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெண், சமீபத்தில் மறைந்த, ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸின் மனைவி யுலியா. தன் கணவர் விட்டுச் சென்ற பணியை தான் முன்னெடுத்துச் செல்லப்போவதாகக் கூறி இருக்கும் யுலியா, தொடர்ந்து புதின் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த பிரியம்வேதா நடராஜன், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வானியல் துறைப் பேராசிரியராக இருக்கிறார். இவரும் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அமெரிக்க இயக்குநர் தெல்மா கோல்டன், பிரிட்டன் நடிகை நியோமி வாட்ஸ் உட்பட பல பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
