மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.
நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை அதிகாலை தனது பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் கொள்ளை முயற்சியின் போது காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையடிக்க வந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
