நடிகர் அஜித் பிரியாணி சமைப்பதும், அடிபட்டு கீழே விழுவதும் எல்லாம் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டா என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். படம் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது என்றால் எவ்வளவோ விஷயங்கள் அப்டேட்டாகத் தந்திருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். மேலும், படம் கைவிடப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். இப்படியான சூழ்நிலையில்தான் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் குறித்தான எக்ஸ்க்ளூசிவ் வீடியோ நேற்று வெளியானது.
இதில் நடிகர் அஜித், கார் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் காட்சிகளும் ரசிகர்களைப் பதற வைத்தது. இதுகுறித்து பத்திரிகையாளர் அந்தணன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடாமுயற்சி
அதில், “அஜித் பல படங்களில் கீழே விழுவது, விபத்து ஏற்படுவது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை விட்டுவிடுவோம். ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து நல்ல அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது இப்படி கீழே, மேலே விழுவது, தலையில் அடிபடுவது இதைத்தான் காட்ட வேண்டுமா?
50 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. எவ்வளவோ நல்ல படங்கள், காட்சிகளை அப்டேட்டாகக் கொடுக்கலாம். அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி காட்டினால் அவரது ரசிகர்கள் எப்படி பதற்றப்படுகிறார்கள்? அஜித்திடம் இருந்து அப்டேட் வருகிறது என்றால் ஒன்று பிரியாணி சமைப்பது இல்லை என்றால் கீழே விழுவதுதானா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். ரசிகர்களும் இதை ஆமோதிக்கும் விதமாக இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா நடிகர்களை பற்றியும் அவர்களது சம்பவங்கள் பற்றியும் நான் எப்பொழுதுமே கமெண்ட் செய்வதில்லை ஏனென்றால் கமெண்ட் செய்யும் அளவிற்கு அவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அதே நேரம் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் விஜயகாந்த் இவர்களது செயலை அதாவது பொது தொண்டினை வரவேற்கிறேன்