மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், அரசு அதிகாரிகள் யாருக்கும் அஞ்சாமல், நேர்மையாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு அதிகாரிகள் யாருக்கும் அஞ்ச வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு விஷயத்திற்கும் தலைவணங்க வேண்டாம் என்றும், வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் அஞ்சாமல், தகுதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை அதிகாரி வரை எந்த ஒரு அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் கடமைகளை ஆற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே,
அனைத்து அதிகாரிகளும் யாருக்கும் அஞ்சாமல், யாருக்கும் சாதகமாக செயல்படாமல் சேவை செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
.
- First Published :
