Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கத்தாரில் இந்திய உளவாளிகளுக்கு தூக்கு – இந்தியாவின் மேல்முறையீடு ஏற்பு! அடுத்து என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கத்தாரில் இந்திய உளவாளிகளுக்கு தூக்கு – இந்தியாவின் மேல்முறையீடு ஏற்பு! அடுத்து என்ன?
38
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் முக்கியமான நாடுகளில் ஒன்று கத்தார். மிகுந்த எண்ணெய் வளம் கொண்ட கத்தாருக்கும் இந்தியாவுக்கும் நல்ல வர்த்தக உறவு இருக்கிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு கத்தாரை அதிகம் சார்ந்து இருக்கிறது.

 Qatar court accepts India appeal against death penalty to 8 ex-Navy personnel

இதற்கிடையே கத்தாரில் இயங்கி வந்த கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டை விதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கத்தார் அரசு: கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் உளவு பார்த்ததாகப் புகார் எழுந்தது. கடந்தாண்டு இந்த குற்றச்சாட்டில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கத்தாரில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியத் தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த 8 பேரும் கைதான நிலையில், இது தொடர்பான வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் 8 பேருக்கும் மரண தண்டனை வழங்கி கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல்முறையீடு: அப்போதே இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அந்த 8 பேரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதற்கிடையே கத்தாரில் 8 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு ஏற்கப்பட்டது. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்து வருவதாகவும் அது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கத்தார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு: இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை சார்பில் கூறுகையில், “இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் ரகசியமானது. அதைப் பொதுவெளியில் வெளியிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டப்பூர்வமா ஆலோசனை பெறப்பட்டது. அனைத்து ஆப்ஷன்களையும் ஆராய்ந்த பிறகு மேல்முறையீடு செய்தோம். இந்த விவகாரத்தில் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் தான் இருக்கிறோம்” என்றார்.

அங்கே சிறையில் இருக்கும் இந்த 8 இந்தியர்களுக்கும் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் அரசு அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை

Next Post

முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார் – ஸ்டாலின் காரசாரம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார் – ஸ்டாலின் காரசாரம்.

முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார் - ஸ்டாலின் காரசாரம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In