
திருப்பத்தூர்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண் டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த திருப்பத்தூர் ஸ்கேன் சென்டர் சுகுமாரை கூட்டாளிகள் 3 பேருடன் சேர்த்து தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சாமநகர், ரயில்வே நிலையம் சாலையைச் சேர்ந்தவர் சுகுமார் (50). இவர் திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார். இந்த ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து, அந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பும் செய்து வந்துள்ளார்.


திருப்பத்தூரில் 20 ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஸ்கேன் சென்டர் நடத்தி பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தது திருப்பத்தூர் காவல்துறைக்கும் திருப்பத்தூர் சுகாதாரத் துறைக்கும் தெரியாது என்பதுநம்ப முடியாத பொய் தற்போது கட்டிங்கில் பிரச்சனை எனவே கைது செய்து விட்டனர் இருப்பினும் தற்போது காவல் துறையைச் சார்ந்த தனிப்படையினரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்