Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கருத்துக் கணிப்புகள் எப்போதும் உண்மையானது இல்லை: ஆம் ஆத்மி நம்பிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 7, 2025
in அரசியல் செய்திகள்
0
கருத்துக் கணிப்புகள் எப்போதும் உண்மையானது இல்லை: ஆம் ஆத்மி நம்பிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



டெல்லியில் ஆட்சி அமைக்க 70 தொகுதிகளில் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வாக்குப் பதிவு முடிந்ததும், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா, “கருத்துக் கணிப்புகள் வரலாற்று ரீதியாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன. ஆனால் உண்மையான முடிவுகளில், ஆம் ஆத்மி இந்தக் கணிப்புகளை விட பல மடங்கு அதிக இடங்களைக் கடந்த காலங்களில் வென்றுள்ளது.

கடந்த 2013, 2015 அல்லது 2020 என அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி குறைந்த அளவிலான இடங்களை வெல்லும் என்று தெரிவித்திருந்தன. ஆனால், அந்தக் காலங்களில் ஆம் ஆத்மி அதிக இடங்களை வென்றன.

டெல்லி மக்கள் பெருவாரியாக ஆம் ஆத்மிக்கு தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த முறை ஆம் ஆத்மி வரலாற்று வெற்றியைப் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “முறைகேடான அந்தக் கட்சி 55 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த இரண்டு மணி நேரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 16 பேரைத் தொடர்பு கொண்டு, ஆம் ஆத்மியை விட்டு விலகி எங்கள் கட்சியில் சேர்ந்தால் அமைச்சரவையில் இடம் தருகிறோம். மேலும், தலா ஒருவருக்கு ரூ. 15 கோடி தருகிறோம் என்று பேசியுள்ளனர்.

55 இடங்களுக்கு மேல் அந்தக் கட்சி வெற்றி பெறும் என்றால் ஏன் எங்கள் கட்சி வேட்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும்.

कुछ एजेंसीज दिखा रही हैं कि गाली गलौज पार्टी की 55 से ज़्यादा सीट आ रही हैं।

पिछले दो घंटे में हमारे 16 उम्मीदवारों के पास फ़ोन आ गए हैं कि “आप” छोड़ के उनकी पार्टी में आ जाओ, मंत्री बना देंगे और हरेक को 15-15 करोड़ देंगे।

अगर इनकी पार्टी की 55 से ज़्यादा सीटें आ रहीं हैं तो…


— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 6, 2025

உண்மையில், இந்தப் போலியான கருத்துக் கணிப்புகள் சில வேட்பாளர்களை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், எங்களில் ஒருவர் கூட அப்படியாக உடையமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போதுமே தவறானதாகத் தான் இருந்திருக்கிறது. பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். பிப்ரவரி 8-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

First Published :

February 07, 2025 6:36 PM IST



.

Previous Post

NTK vs DMK: 'பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்!' விளாசும் சீமான்!

Next Post

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In