வைரலாகும் வீடியோவில், அந்தப் பெண் சாலையின் நடுவில் சலசலப்பை ஏற்படுத்துவதைக் காணலாம். மற்றொரு வீடியோவில், அவர் ஒரு போக்குவரத்து காவலரின் ஸ்கூட்டரில் காவல் நிலையத்திற்குச் செல்வதைக் காணலாம். போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், சாலை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த 51 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிங்க் நிற சல்வார் குர்தா அணிந்த அந்தப் பெண், சாலையில் ஓடும் வாகனங்களை நிறுத்துவதைக் காணலாம். அந்தப் பெண் திடீரென ஓடும் வாகனத்தின் முன் நின்று பாதையைத் தடுக்கிறார். பின்னர் அவர் ஒரு காரின் பானட்டில் சாய்ந்து கொண்டிருக்கிறார், பின்பு மற்றொரு காரின் ஜன்னல் அருகே நின்றுகொண்டு, அவர்களின் பாதையைத் தடுக்கிறார். பிறகு வலுக்கட்டாயமாக ரிக்ஷாவுக்குள் நுழைந்து ஓட்டுநர் சீட்-க்கு அருகில் நின்று, சிறிது நேரம் கழித்து கீழே இறங்குகிறார்.
அவரது செயல்களால் சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்க்கும் உள்ளூர் மக்கள், சாலையோரத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்துக்கொண்டும், வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர். இந்த பெண்ணால் சாலையில் சலசலப்பு இருந்தபோதிலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர யாரும் முன்வரவில்லை.
தொடரும் அந்த வீடியோவில், அவர் திடீரென்று ஓடும் பைக்கைப் பிடித்து நிறுத்துகிறார். இந்த பைக் ஒரு போக்குவரத்து காவலருக்கு சொந்தமானது போல் தெரிகிறது. குடிபோதையில் இருந்த அந்தப் பெண் பைக்கில் ஏறுவதும் தெரிகிறது. பின்னர் அந்த அதிகாரி அவரை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.
A video from Uttarakhand’s Haridwar has gone viral, showing a drunk woman creating chaos near the Rodibelwala Chowki, close to the holy site of Har Ki Pauri. In the video, the woman is seen stopping cars in the middle of the road and, in a bizarre act, halting a moving traffic… pic.twitter.com/x3BQfJmhSZ
— ForMenIndia (@ForMenIndia_) April 20, 2025
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது நடத்தையால் நெட்டிசன்கள் கோபமடைந்தனர். மறுபுறம், அவர் பாதுகாப்பாக வீட்டை அடைந்தாளா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இருப்பினும், அந்த பெண்ணின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அவள் உண்மையில் குடிபோதையில் இருந்தாரா? இல்லையா? என்பது கூட உறுதிப்படுத்தப்படவில்லை. ஹரித்வார் காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, இரவில் ஒரு இளம் பெண் மது போதையில் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும், அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோரிக்கை விடுத்தனர். எனினும் இந்த வீடியோ குறித்து போலீசார் இன்னும் பதிலளிக்கவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 28, 2025 3:03 PM IST
