Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரகசிய காதலருடன் கணவரை கொன்ற பெண்..! 9 வயது மகன் கொடுத்த வாக்குமூலத்தில் வெளியான உண்மை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2025
in அரசியல் செய்திகள்
0
ரகசிய காதலருடன் கணவரை கொன்ற பெண்..! 9 வயது மகன் கொடுத்த வாக்குமூலத்தில் வெளியான உண்மை..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கெர்லி பகுதியைச் சேர்ந்தவர் மான் சிங். இவர், தனது மகன் மற்றும் மனைவி அனிதாவுடன் வசித்து வந்தார். கடந்த 7 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மான் சிங் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரின் உடலில் காயம் இருந்ததுடன், பல்லும் உடைந்திருந்தது. இது தொடர்பாக மான் சிங் சகோதரர் கப்பார் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் உடற்கூராய்வு முடிவில், மான் சிங் அடித்து, மூச்சுத்திணற வைத்து கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, அவரின் 9 வயது மகன் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சம்பவத்தன்று இரவில் தனது தந்தை மான் சிங் தூங்கியதும், தான் அரைதூக்கத்தில் இருந்ததாக கூறியுள்ளார். அப்போது, திடீரென தனது அம்மா அனிதா கதவை திறந்ததும், காசி அங்கிள் மற்றும் மேலும் நான்கு பேர் தங்களது பெட் ரூமுக்குள் வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களை கண்டதும் அச்சத்தில் தூங்குவது போன்று நடித்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளார்.

பின்னர், தனது அம்மாவின் கண் முன்னே, தந்தையை காலை பிடித்துக் கொண்டு அந்த கும்பல் தாக்கியதாக தெரிவித்துள்ளார். உடனே, தனது தந்தை அருகே சென்றதும், காசி அங்கிள் தன்னை தூக்கி மிரட்டியதாக சிறுவன் கண்ணீர் சிந்தியுள்ளார். அச்சத்தில் தான் உறைந்த நிலையில், தனது தந்தையை காசி அங்கிள் தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், மான் சிங்கின் மனைவி அனிதாவை கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது. சிறிய கடை நடத்தி வந்த அனிதாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த காசிராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. நாளடைவில் இது திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இதனால், தங்களது ரகசிய உறவுக்கு இடையூறாக உள்ள மான் சிங்கை தீர்த்துக்கட்ட இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, இருவரும் சேர்ந்து 2 லட்சம் ரூபாய் கொடுத்து, கூலிப்படையினர் 4 பேரை தயார் செய்துள்ளனர். பின்னர், சம்பவத்தன்று இரவில் கணவர் வீட்டிற்கு வந்ததும், வெளிக் கேட்டை மூடுவது போன்று நடித்த அனிதா, அதை திறந்தே வைத்துள்ளார்.

பின்னர், நள்ளிரவில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேருடன் வந்த காசிராம், அனிதாவின் உதவியுடன் மான்சிங்கை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, அனிதா, அவரின் ரகசிய காதலன் காசிராம், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அண்மையில் மேகாலயாவில் ஹனிமூன் சென்ற இடத்தில் கூலிப்படை மூலம் கணவரை கொலை செய்த பெண், தனது காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கணவரை கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடிய பெண், 9 வயது மகனின் வாக்குமூலத்தின் மூலம், ரகசிய காதலனுடன் சிக்கிய சம்பவம் ராஜஸ்தானில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 19, 2025 2:37 PM IST



.

Previous Post

மேஹாலயா தேனிலவு கொலை: புதிய திருப்பம்.. சஞ்சய் வர்மா என்பவருக்கு 100 முறைக்கு மேல் போன் செய்த சோனம் – பின்னணி என்ன?

Next Post

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In