கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் போட்டியிடுகிறார், இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தொகுதியான சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் திமுக கிளை செயலாளர் மற்றும் நிர்வாகிகள் இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைராலகி வருகிறது.
மேலும் வாக்காளர் ஒருவர் திமுக நிர்வாகியை பார்த்து நீ என்றைக்கு கட்சிக்கு வந்தாய் என கேள்வி கேட்கும் வீடியோவும் வலைதளத்தில் வைரலாகி வருகிறது, தொடர்ந்து ஆளுங்கட்சி என்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா படுஜோராக நடைபெற்று வருகிறது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
