ஸ்ரீநகர்: காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ தூரம் சரக்கு ரயில் ஒன்று சென்றது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில், டிரைவர் ஹேண்ட் பிரேக் போடாமல் இறங்கியதால் சரக்கு ரயில் ஒன்று 100 கி.மீ., வேகத்தில் 5 ஸ்டேஷன்களை கடந்து 70 கி.மீ. தூரம் வரை சென்றது. இதையடுத்து பஞ்சாபின் கோஷியார்பூரில் சரக்கு ரயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

