Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த மாணவி… கல்லூரி விடுதியில் குழந்தையைப் பெற்றதால் அதிர்ச்சி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 15, 2024
in Default
1
காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த மாணவி… கல்லூரி விடுதியில் குழந்தையைப் பெற்றதால் அதிர்ச்சி!
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தருமபுரி அருகே கல்லூரி மாணவிக்கு விடுதியிலேயே குழந்தை பிறந்த நிலையில், அந்த பெண் வாலிபர் ஒருவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த சம்பவம் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தருமபுரி அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மாணவியின் வயிறு பெரிதான நிலையில் காணப்பட்டதால், அவருடன் பயின்ற மாணவிகள் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனது உடல்வாகு இவ்வாறு தான் என அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் பிற மாணவிகளும், விடுதி காப்பாளரும் அது குறித்து பெரிதாக கவலை கொள்ளவில்லை.

தருமபுரி  அரசு கலைக்கல்லூரி

தருமபுரி அரசு கலைக்கல்லூரி

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலையில் அந்த மாணவி திடீரென தனக்கு வயிறு வலிப்பதாக கூறி துடித்துள்ளார். இதனால் செய்வதறியாது சக மாணவிகள் திகைத்திருந்த நிலையில், அந்த மாணவிக்கு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளும், விடுதி காப்பாளரும் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதி

அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதி

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விடுதி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாணவியின் பக்கத்து ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மனோஜ் என்பவருடன் மாணவி லிவ்-இன் உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. மாணவி இந்த விடுதியில் சேர்ந்து 7 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், விடுதியில் சேரும்போதே மாணவி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனோஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினருக்கு விடுதி நிர்வாகத்தினர், போலீஸார் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இருதரப்பும் புகார் அளிக்காத நிலையில், மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸாரும், விடுதி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

‘பணத்தாள்களை விட வாக்குகளின் சக்தி அதிகம்’: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ்!

Next Post

“அவர்கள் விவசாயிகள்; கிரிமினல்கள் அல்ல” – எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் பாரத ரத்னா விருது விழாவில் உருக்கம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அவர்கள் விவசாயிகள்; கிரிமினல்கள் அல்ல” – எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் பாரத ரத்னா விருது விழாவில் உருக்கம்..

“அவர்கள் விவசாயிகள்; கிரிமினல்கள் அல்ல” - எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் பாரத ரத்னா விருது விழாவில் உருக்கம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மாணவர்கள் தங்கும் அரசு விடுதிகளில் இது போன்ற பிள்ளை பிறக்கும் சம்பவங்கள் வருத்தப்பட வேண்டியது. இதற்கு முக்கிய காரணம் வார்டன் என்கிற காப்பாளரின் கவன குறைவு எனவே அந்த வார்டன் மற்றும் அந்த தங்கும் விடுதிக்கு பொறுப்பான அலுவலர் யார் என்று பார்த்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனதே இது போன்ற சம்பவங்கள் தொடரும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In