எந்த மாதிரியான திரைப் பாணி வடிவம்…
மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தை கொண்டே இதை எழுதியிருக்கிறேன்.
மனிதர்களுக்கு சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்தச் சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் சிறுபான்மை என ஜாதிகளின் அடுக்குகளைக் கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை.
சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம்,
துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா.
கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை.
ஹீரோயின் தேடலுக்குதான் கேரளம் போவார்கள்… இந்த முறை கேரள ஹீரோவை அழைத்து வந்திருக்கிறீர்கள்…
“மெட்ராஸ்காரன்’ கதைக்கு ஒரு புதுமுகம்தான் தேவை. ஆனால், அப்படி செய்யும் போது வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும். ஏனென்றால், நான் ஏற்கெனவே புதுமுகங்களை வைத்து எடுத்த “ரங்கோலி’ படத்தின் வியாபாரத்தில் ரொம்பவே சிரமப்பட்டோம்.
அதனால் அதையும் மனதில் வைத்து சு முடிவு எடுக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப் படத்தின் கதையை நான் முன்னாடியே எழுதி விட்டேன். அப்போது இந்தக் கதையை எழுதும்போதே ஷேன் நிகமை மைன்ட்ல வைத்துதான் எழுதினேன். ஷேன் நிகமை அவரின் கேரியர் ஆரம்பத்தில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். ரொம்ப எதார்த்தமாக நடிக்கக்கூடியவர்.
அதனால் அவரை மைன்ட்ல வைத்து எழுதினேன். இப்போது “மெட்ராஸ்காரன்’ கதையை படமாக்கலாம் என்று முடிவு பண்ண சமயம்தான் அவரோட ஆர்டி எக்ஸ் படம் வெளியாகி ஹிட் ஆகி இருந்தது. நான் நினைத்த மாதிரி இந்தக் கதைக்கு ஏற்ற, தமிழுக்கு ஃப்ரஷ்ஷான முகமாகவும் இருந்தார். மலையாளத்தில் நல்ல படங்களைக் கொடுத்த நடிகராக இருப்பதால் வியாபாரத்திற்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று தோன்றியது.
அதனால் அவரை ரீச் பண்ணி, கதையும் சொன்னேன். முழுக்கதையும் தமிழில் தான் சொன்னேன். கேட்டுட்டு உடனே ஓகே சொல்லவில்லை. மூன்று வாரங்கள் கழிச்சு மறுபடியும் கூப்பிட்டு கதை சொல்ல சொன்னார். அந்த மொமன்ட்ல இருந்து இந்தப் படத்தை அவர் படமா நினைக்க ஆரம்பிச்சிட்டார். அவரே நிறைய ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டார்ர். இப்போது வரைக்கும் ஆர்வமாக இருக்கிறார்.