Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை… வெளியானது அதிர்ச்சி வீடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 30, 2024
in Default
1
பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை… வெளியானது அதிர்ச்சி வீடியோ!
176
SHARES
284
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் மேட்லி சாலைப் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பழனிசாமி தொழில் சம்பந்தமாக தனது நண்பர் ராம்குமார்(50) என்பருடன், வேளச்சேரி சேவா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பின்னர் அங்கு காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென பழனிசாமியை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

https://youtu.be/t-Efa02tWxg

பழனிசாமி வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சி

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ராம்குமார் அவர்களைத் தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல் ராம்குமாரை துரத்திவிட்டு பழனிசாமியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பழனிசாமி உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தரமணி காவல் நிலையம்

தரமணி காவல் நிலையம்

பின்னர் தரமணி போலீஸார் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப பதிவு செய்து பழனிசாமியின் நண்பர் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக பழனிசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீஸார் பழனிசாமி கொலைக்கான உண்மையான காரணம் குறித்தும் கொலையாளிகள்‌ குறித்தும்‌ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ரியல் எஸ்டேட் அதிபர் பழனிசாமி வெட்டிக் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

மகாராஷ்டிராவில் அரசியல் திருப்பம்; மும்மூர்த்திகளில் யார் அடுத்த முதல்வர்?

Next Post

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை..

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    நில அபகரிப்பு நில மோசடிக்கு உடந்தையாய் உள்ள வேளச்சேரி தாசில்தார் மற்றும் அலுவலக ஊழியர்களே இதற்கு அடிப்படை காரணம். எனவே உளவுத்துறையினரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரும் இந்த வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In