செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் பீஹாரில் கடத்தலில் ஈடுபட்டனர். பீஹாரில் அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில், துப்பாக்கி முனையில் தன் மகளுக்கு தாலி கட்ட வைத்துள்ளார் செங்கல் சூளை அதிபர்.
பீஹாரில், அரசுப்பணியில் உள்ள இளைஞர்களை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பீஹாரின் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதம் குமார். பீஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அவருக்கு அரசு வேலை கிடைத்த 24 மணி நேரத்தில் பள்ளிக்கு வந்த 4 பேர் கும்பல் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் தான் கடத்தலில் ஈடுபட்டனர். ராஜேஷ் ராய், துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு மிரட்டி உள்ளார். அதில் பயந்து போன கவுதம் குமார் தாலி கட்டி உள்ளார். சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கலாம் ஆனால் வாழ வைக்க முடியாது. இது போன்ற கடத்தல் திருமணங்களால் இரண்டு நபர்களின் வாழ்க்கைக்கையுமே வீணா போய்விடும்