Last Updated:
திருப்பதி மலையில் அறைகள் பெற காத்திருந்த பக்தர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கோவிந்தராஜனின் உறவினர் காயமடைந்தார். கார்த்திகேயன் மற்றும் கோவிந்தராஜனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பதி மலையில் அறைகள் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் பெரும் கூச்சல் குழுப்பம் நிலவியது.
கோவையை சேர்ந்த கார்த்திகேயன் தனது 7 வயது மகனுடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரின் குடும்பத்தினர் 13 பேர் திருமலைக்கு வந்திறங்கி, அறைகள் எடுப்பதற்காக சிஆர்ஓ அலுவலகம் அருகே காத்திருந்தனர். கோவிந்தராஜன் குடும்பத்தினரின் உடைமைகளை வைத்து கார்த்திகேயனின் மகன் விளையாடியதால் அவர்கள் சிறுவனை தள்ளிவிட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் அவர்களை அதட்டியதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கோவிந்தராஜனின் உறவினருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டதால் குடும்பத்தினர் கூச்சலிட்ட நிலையில், தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சண்டையை விலக்கிவிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திடீர் பரபரப்பால் பக்தர்கள் பதறிய நிலையில், கார்த்திகேயன் மற்றும் கோவிந்தராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
March 21, 2025 6:07 PM IST
திருப்பதி மலையில் பக்தர்கள் மோதல்.. சிறுவனை தள்ளிவிட்டதால் ஆரம்பித்த தகராறில் ஒருவருக்கு மண்டை உடைப்பு

