Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவையில் முகாமிட்டுள்ள அன்பகம் கலை! ஸ்டாலினுக்கு ஸ்பாட்டிலிருந்து பறக்கும் ரிப்போர்ட்! பெரிய அஜெண்டா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2023
in அரசியல் செய்திகள்
0
கோவையில் முகாமிட்டுள்ள அன்பகம் கலை! ஸ்டாலினுக்கு ஸ்பாட்டிலிருந்து பறக்கும் ரிப்போர்ட்! பெரிய அஜெண்டா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Tamilnadu oi-Arsath Kan
Published: Thursday, June 15, 2023, 9:44 [IST]
கோவை: திமுக அமைப்புச் செயலாளரும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமானவருமான அன்பகம் கலை, கோவையில் முகாமிட்டு நாளை நடைபெறவுள்ள கண்டன பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், நாளை கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று வெளியானது. இதையடுத்து அன்பகம் கலையை கோவைக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கிறார். கோவை மாநகர திமுக செயலாளர் சிங்காநல்லூர் கார்த்திக்கை பொறுத்தவரை அண்மையில் தான் இதய அறுவை சிகிச்சை கொண்டார். அதேபோல் கோவை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக இருக்கும் தொண்டாமுத்தூர் ரவிக்கும், தளபதி முருகேசனுக்கும் போதிய அனுபவின்மையால் அவர்கள் பொதுக்கூட்டத்தை சொதப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் தான் அன்பகம் கலை களமிறக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுத்தவரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்பதால் கோவையில் வைத்து கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறது திமுக தலைமை. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை முன்னெடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். நேற்று மாலை வரை சென்னையில் இருந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் இரவோடு இரவாக கோவை புறப்பட்டு வந்துவிட்டனர். கோவை சிவானந்த காலனியில் உள்ள 100 அடி சாலையை பார்வையிட்ட அன்பகம் கலை, பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
DMK organizational secretary and close associate of Chief Minister Stalin, Anbagam Kalai, is camp in Coimbatore and is looking after the preparations for the protest rally to be held tomorrow.
Story first published: Thursday, June 15, 2023, 9:44 [IST]

.

Previous Post

தரையில் புரண்டு கதறி அழுதார்… – செந்தில்பாலாஜி கைதின்போது நடந்தவை குறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்

Next Post

காய்கறி மூட்டைகளுக்கு இடையே லாரியில் கடத்தப்பட்ட 388 கிலோ கஞ்சா பறிமுதல் – போலீஸாரின் அலட்சியத்தால் 2 பேர் தப்பினர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காய்கறி மூட்டைகளுக்கு இடையே லாரியில் கடத்தப்பட்ட 388 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸாரின் அலட்சியத்தால் 2 பேர் தப்பினர்

காய்கறி மூட்டைகளுக்கு இடையே லாரியில் கடத்தப்பட்ட 388 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸாரின் அலட்சியத்தால் 2 பேர் தப்பினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In