Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலித் பெண்ணைத் திருமணம் செய்தவருடன் பேசினால் ரூ. 1000 அபராதம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 28, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தலித் பெண்ணைத் திருமணம் செய்தவருடன் பேசினால் ரூ. 1000 அபராதம்!
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடகத்தில் உள்ள ஹோராபைலு கிராமத்தில் தலித் பெண்ணைத் திருமணம் செய்த நபரையும், அந்தக் குடும்பத்தையும் அந்தப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தியுள்ள தீண்டாமைக் குற்றம் அரங்கேறியுள்ளது. 

அந்தப் பகுதியில் உள்ள சாதியத் தலைவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாரும் அந்தக் குடும்பத்தினருடன் பேசக்கூடாது, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது, ஊர் கோயிலில் நடக்கும் விழாக்களுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் விதியை மீறுபவர்கள் தொடர்பான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் வசித்துவந்த தினேஷ் மற்றும் பிரீத்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தினேஷின் குடும்பமும் பிரீத்தியை ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த கிராமத்தில் அதிகமாக இருக்கும் ‘ஜோகி’ பிரிவினரால் இந்த சமூக சமநிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதையறிந்த தினேஷின் சமூகத்தைச் சேர்ந்த மற்ற குடும்பத்தினர் இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். மனைவி பிரீத்தி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய டிஎஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலேஷப்பா, ‘இந்த ஜோகி சமூகத்தைச் சேர்ந்த சிலர் போலியாக தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்களைத் தயார் செய்து அரசின் சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.

சலுகைகளப்பெற தங்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்றுக்கொள்வதில் அவ்வளவு கௌரவம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டும் என டிஎஸ்எஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

.

Previous Post

எட்டு இந்தியர்களின் மரண தண்டனையை குறைத்தது கத்தார் நீதிமன்றம்

Next Post

தூத்துக்குடியில் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் – ஆறுமுகம் பிள்ளை வேண்டுகோள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தூத்துக்குடியில் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் – ஆறுமுகம் பிள்ளை வேண்டுகோள்.

தூத்துக்குடியில் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் - ஆறுமுகம் பிள்ளை வேண்டுகோள்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் அந்த குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது எத்தனையோ அரசு உயர் அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர் அவர்களிடம் போய் இந்த கிராம மக்கள் உதவி கேட்கவில்லையா இல்லை பேசாமல் தான் இருக்கிறார்களா எந்த சமுதாயத்தை சார்ந்த நபர்களாக இருந்தாலும் சரி பலமான நபர்களாக இருந்தால் நம் மக்கள் அவர்கள் முன் கைகட்டி நிற்பதும் பலவீனமான நபர்களாக இருந்தால் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும் நம் மக்களின் வாடிக்கை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In