கான்பூர்: பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி தேடி, நீதிமன்றங்களிலும், நீதிபதிகளிடமும் முறையிடுவது வழக்கம்.. ஆனால், ஒரு நீதிபதியே, சக பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்?? நம்ம நாட்டில்தான் இப்படி ஒரு சமாச்சாரம் நடந்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் பெண் சிவில் நீதிபதி அந்த பெண்.. ஆனால், இவரது பெயர் வெளியிடப்படவில்லை.. தன்னுடைய சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகாரை கூறியிருக்கிறார் இந்த பெண் நீதிபதி.
பாரபங்கியில் தான் பதவியில் இருந்தபோது, மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த பெண் நீதிபதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

நடவடிக்கை: இதுகுறித்து, கடந்த வருடமே அலகாபாத் ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்ததாகவும், ஆனால், இப்போதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.. பாதிக்கப்பட்ட இந்த பெண் நீதிபதி, தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு 2 பக்க கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: “பாராபங்கி என்ற பகுதியின் நீதிபதியாக எனக்கு பணி வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட நீதிபதி என்னை இரவு சந்திக்குமாறு வர சொன்னார். அப்போது மிகவும் கீழ்த்தரமான முறையில் என்னை நடத்தினார். பாலியல் தொல்லை கொடுத்தார். குப்பை தொட்டியை விட, ஒரு பூச்சியை விட கேவலமாக நான் நடத்தப்பட்டேன். இதனால் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.
போலி நடவடிக்கை: ஐகோர்ட் மேலிடத்திற்கு கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தேன். ஆனால் இது அலட்சியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக போலியான நடவடிக்கை எடுப்பதாக உணர்கிறேன். இது தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரை மாவட்ட நீதிபதியில் இருந்து மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தவறும் பட்சத்தில், எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது.
எனக்கு இனியும் வாழ எனக்கு விருப்பமில்லை.. இந்த ஒன்றரை வருடங்களில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன்… இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும்.. தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள்” என்று இவ்வாறு பெண் நீதிபதி கூறியுள்ளார்.
வைரல் கடிதம்: இவரது கடிதம் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அத்துடன், மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்தும், அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் முழு அறிக்கை கேட்டுள்ளார்.
ஒரு நீதிபதி, சக பெண் நீதிபதிக்கே பாலியல் தொல்லை தந்ததாக சொல்லப்படுவது அதிர்ச்சியை தந்துவரும்நிலையில், தற்கொலை செய்யவும் அனுமதி கேட்டிருப்பது அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

நீதிக்கே அநீதியா மிகவும் வருத்தமான விவகாரம்
ஒரு நாட்டில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடைசியாக நீதி கிடைக்கும் இடம் நீதி மன்றம் ஒன்றுமட்டும்தான் அந்த இடத்திலும் நீதி செய்துவிட்டால் நாடு சுடுகாட்டை தன் தான் தேடி போகவேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொருப்பு காவல்துறை, ராணுவத்துறை, நீதிமன்றம் இந்த மூன்றும் முக்கியம் வகிக்கிறது. இந்த மூன்று துறையிலும் பணியாற்றுபவர்கள் நேர்மையானவர்காக , உண்மையானவர்களாக, தேசபற்றுமிக்கவர்களாக, வெறுப்பு விருப்பு இல்லாதவர்களாக, பொறுப்பு மிக்கவர்களாக, லஞ்சம் லாவன்யம் பெறாதவர்கள் ஆக, ஊழல் செய்பவர்களாக, ஊழலுக்கு துணைபோகாதவர்களாக, ஒருதலைபட்சம் கய்ப்புணர்ச்சி இல்லாதவர்களாக, நாட்டின் இறையாண்மைக்கு கலங்கம் ஏற்படாமல் நடந்து கொள்பவர்களாக ஆசா பாசம் அத்துமீறாமல் நடந்து கொள்பவர்களாக, உயர்வு தாழ்வு அதிகாரம் ஆனவங்களுக்கு கட்டுபடாதவர்களாக , பணம் பதவிகளுக்கு அடிமையாகிவிடாதவர்களாக இருப்பவர்களாக இருக்கவேண்டும் அப்படிப்பட்டவர்கால் மட்டுமே நீதிதுறையில் நேர்மையாக பணியாற்றமுடியும்.சுயநலம் சொத்து சேர்த்து கொள்ளும் பேராசை இருக்கக்கூடாது.நீதி துறை நேர்மையாக செயல்பட்டால் நாட்டில் அநீதிகள் இருக்காது.கொலை கொள்ளை கற்பழிப்பு சாதி வெறி லஞ்சம் ஊழல் கடத்தல் இருக்காது. நாடு அமைதியான சூழ்நிலைக்குத் தள்ளப்படும். இது அனைத்தும் உண்மை.

காவல்துறை, சுயநலம்உள்ள அரசியல் வாதிகளுடனும் , ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுடனும், கள்ளக்கடத்தல்செய்யும் அரசியல் வாதிகளுடனும், கற்பழிப்பு செய்யும் அரசியல் வாதிகளுடனும் சாதி வெறி , சமயவெறி, இனவெறி உள்ள அரசியல் வாதிகளும் கைகோர்த்துக் கொண்டு, பணத்திற்காக, பதவி உயர்விற்காக, சுயநலத்திற்காக, பொன் பொருள் சொத்து சேர்த்து கொள்ள வேண்டும் என்ற பேராசை யால் நாட்டில் நல்லவர்களை அடக்கி நல்லவர்கள்மீது பொய்கேஸ்கள் போட்டு அப்பாவிகளை நல்லவர்களை நேர்மையானவர்கள் ஐ தேசபற்றுமிக்கவர்களை அழித்து வருகிறது.550/- கோடி லஞ்சம் பெற்று மாண்புமிகு நீதியரசர் C.S.KARNAN. DR.M.DANASEKARAN, D.CHANDRASEKAR. ஆகியோர் மீது சைபர்கிரைம் சென்னை பொய்கேஸ்கள் போட்டு தனசேகரன் கர்ணன் இருவரையும் சையனைடு பாய்சன் உணவில் கலந்து கொடுத்து கொள்நிணைத்தது. பொய்கேஸ்கள் போட்டு நான்கு மாதம் புயல் சிறையில் அடைத்து ஜாமின் கொடுக்கவில்லை தடுத்து கொடுமைபடுத்தியது வன்கொடுமைகள் செய்தது.இதுஅணைத்தும் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இவர்களை கொன்றுவிட்டால் உயர்ந்த பதவியில் உள்ள நீதிஅரசர்களிடம் பாராட்டுகளை பெறமுடியும் பெற்றுக் கொண்ட 550/- கோடி லஞ்சம் பங்கு பெற்றவர்கள் அணைவரும் இணைந்து நீதி துறையில் நடந்த அநீதிகளை மறைப்பதற்காக அநீதிகளை சுட்டி காட்டிய மாண்புமிகு C.S.KARNAN, DR.M.DANASEKARAN இவர்கள்மீது பொய்வழக்கு பதிவு செய்து இவர்களுக்கு நஞ்சு கலந்த உணவு கொடுத்து கொலைசெய்ய துணிந்த கொடுமை எந்த நாட்டிலும் நடந்திருக்காது என்பது உண்மை. அரசு இலவசமாக தரவேண்டிய வேலையை பல கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் சுயநலத்திற்க்காக தகுதி வாய்ந்த இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் இதைவிட என்ன கொடுமை எந்த நாட்டில் இது நடக்கும். கீழ்சாதி யில் பிறந்துவிட்டால் கள் என்பதற்க்காக அரசு பணிசெய்யும் அதிகாரிகளை துன்புறுத்துவது பாய்காட்செய்வது மறஇயஆதஐகஉறஐவஆக பேசுவது நடத்துவது எந்த நாட்டில் இது நடக்கும் கேட்பாரற்று கிடக்கிறால் என்ற காரணத்திற்காக நீதித்துறையில் பணியாற்றுபவர்கை பெண்களை அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் குற்றங்கள் செய்யலாமா? என்ன நீதி இது.