Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை | மாணவர்களிடையே தகராறு: தனியார் கல்லூரியில் பட்டாசு வீசியதால் பரபரப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | மாணவர்களிடையே தகராறு: தனியார் கல்லூரியில் பட்டாசு வீசியதால் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: வேளச்சேரி தனியார் கல்லூரியில்மாணவர்களிடையே நேரிட்டதகராறில், கல்லூரி வளாகத்துக்குள் நேற்று பட்டாசுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி தரப்பில்பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், மாணவர்களுக்குள் மோதல் தொடர்ந்துள்ளது.

இந்தக் கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தாவரவியல் பயிலும் மாணவர்கள் சிலர்பாட்டு பாடியதை தனுஷ் கிண்டல்செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுஷைத் தாக்கியுள்ளனர்.

வார விடுமுறை முடிந்து நேற்று கல்லூரி திரும்பிய தனுஷ், தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி பட்டாசுகளை வீசியுள்ளார். எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீசியதாகக் கருதி, சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேறினர்.

தகவலறிந்து வந்த கிண்டி போலீஸார், மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “கல்லூரியில் ஏற்கெனவே நடந்த பிரச்சினை காரணமாக மாணவர் ஒருவர் பட்டாசு வீசியுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக 4 மாணவர்களைப் பிடித்து, விசாரித்து வருகிறோம்” என்றனர்.

.

Tags: கலலரயலசனனதகரறதனயரபடடசபரபரபபமணவரகளடயவசயதல
Previous Post

கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியத் தடையில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுக: சீமான்

Next Post

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In