குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானார்.
அம்ரேலியின் சித்ரசார் கிராமத்திலுள்ள பருத்தி தோட்டத்தில் நேற்று (ஜன.12) மாலை வேலை செய்து வந்த அவரது பெற்றோருக்கு உதவி செய்வதற்காக 7 வயதுடைய சிறுமி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையொன்று அந்த சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தின் ஜாப்ராபாத் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும், அந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க: 2025 – 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% – 4.7% ஆக இருக்கும்: தகவல்
