Last Updated:
கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகள் மற்றும் ஆராய்ச்சி, தொழில் துறைகளில் ஆர்வம் உள்ள இளம் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இஸ்ரோவில் செயல்படுத்தப்படும் இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாணவர்கள் இடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தை துாண்டும் வகையில் இஸ்ரோ ஒரு முயற்சியை எடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, யுவிகா அதாவது, ‘யுவ விஞ்ஞானி கார்யகிராம்’ என்கிற இளம் விஞ்ஞானி திட்டத்தை செயல்படுத்துகிறது. கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகள் மற்றும் ஆராய்ச்சி, தொழில் துறைகளில் ஆர்வம் உள்ள இளம் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் சேர நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வாளர் பட்டியல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியிடப்படும். அதை தொடர்ந்து மே 19 முதல் 30ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறும்.
இதற்கு 8ஆம் வகுப்பில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று, தற்போது 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் கண்காட்சி, வினாடி-வினா, ஒலிம்பியாட், விளையாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற அனுபவம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
March 21, 2025 11:06 AM IST

