தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு “நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், முக்கியத் தலைவர்களின் பெயர் பலகையில் அந்ததந்த மாநில மொழிகளில் எழுத்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இதில் பேசியிருக்கும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மாநில உரிமைகளைக் காக்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைப்பில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம்.

இங்கு நான் முக்கியமான ஐந்து விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இன்று தொகுதி குறையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மக்கள் தொகை வளர்ச்சியில் பின் தங்கி பிரச்னைகளுக்குள்ளாகியிருக்கிறோம்.
2. தொகுதி மறுசீரப்பைப்பின் வரலாறு
3. இன்றைய தொகுதி மறுசீரமைப்பின் நிலை.
4. தென் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்
5. நாம் ஏன் இங்கு ஒன்று திரண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
இந்த ஐந்து கேள்விகளுக்கான பதிலை புரிந்துகொண்டால், நாம் இந்த ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பில் இருக்கும் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
