இன்று காலை 10.15 மணி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், இந்தப் போட்டிக்கான டிக்கெட் சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது. மேலும், சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், டிக்கெட் விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் விலைகள் மற்றும் ஸ்டாண்டுகள்
ரூ.1,700 – சி/டி/இ லோயர்
ரூ.2,500 –ஐ/ஜே/கெ அப்பர்
ரூ.3,500 – சி/டி/இ அப்பர்
ரூ.4,000 – ஐ/ஜே/கெ லோயர்
ரூ.7,500 – கே.எம்.கே டெரஸ்
இதையும் படிக்க: விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்
