தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் வகையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில், கல்லூரி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் வென்று முதலிடம் பிடித்த சென்னை அணியினருக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகையை இன்று வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 2 ஆவது இடம்பிடித்த செங்கல்பட்டு அணிக்கு ரூ. 4.50 லட்சம், 3-ஆம் இடம் வென்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பதக்கங்கள் & சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .




