இதையடுத்து சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்ள அப்பகுதி திமுகவினரும் குவிந்து வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வத்தலகுண்டு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறது.
