விஜய்யின் படங்கள்
விஜய் கடைசியாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் படத்தில் நடித்திருந்தார். விஜய் இப்போது ஹெ.வினோத்தின் ஜன நாயகன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அரசியலுக்கு வருவதால் விஜய்யின் கடைசி படமாக இது இருக்கும் என அவரே உறுதி அளித்துள்ளார். இந்த ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்து வருகின்றனர், இந்த படம், 2026 தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வெளியாகும்.
