தொகுதி மறுவரையறை குறித்து மத்திய உள்துறை அமைச்சரின் பேச்சு நம்பகத்தன்மையற்றது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியிருந்தார். இது தொடர்பாக கோவையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “தென்மாநிலங்களுக்கு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது” என்றார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து தவறான தகவல்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக” குற்றம்சாட்டினார். “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று அமித்ஷா கூறியிருப்பது திசை திருப்பும் செயல்” என்றார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை மட்டும் தட்டும் வகையில் அமித்ஷா பேசியிருக்கக் கூடும் என்றும் கூறினார்.மக்களவைத் தொகுதிகளில் தென்மாநிலங்களுக்கு இருக்கும் பங்கை குறைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2021 மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் தென்மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும் என்றும் கூறியுள்ளார்.


❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️