Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 19, 2025
in அரசியல் செய்திகள்
0
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 19, 2025 10:53 AM IST

Chief Election Commissioner Gnanesh Kumar | நாட்டை பலப்படுத்துவதற்கான முதல் படி வாக்களிப்பதுதான் என இன்று பதவி ஏற்றுக்கொண்ட தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

News18News18
News18

நாட்டின் 26-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு டெல்லியில் கூடி, தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்தது. முன்னதாக, இந்தக் குழு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஞானேஷ் குமாரின் நியமனத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். தேர்வுக் குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என ராகுல் காந்தி கூறியதாகத் தெரிகிறது.

இந்த சூழலில், ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஞானேஷ் குமார் இந்த பதவியில் இருப்பார்.

கேரள பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய தலைமை தேர்தல் ஆணையர் இன்று பதவி ஏற்பு – நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

பதவி ஏற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “18 வயதை கடந்த இந்திய குடிமக்கள் அனைவரும், வாக்காளர்களாக வேண்டும். அவர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். அரசியல் சட்ட சாசனத்தின் படி, தேர்தல் சட்டங்கள், விதிகள், வழிமுறைகளிபடி இந்திய தேர்தல் ஆணையம் எப்போதும் மக்களுடன்தான் இருந்தது, இனியும் இருக்கும்” என்றார்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

February 19, 2025 10:53 AM IST



.

Previous Post

இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்கள்? டிரம்ப் கேள்வி!

Next Post

Trichy Weather 19 February 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trichy Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Trichy Weather 19 February 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In