Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kashi Tamil Sangamam | காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி.. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2025
in அரசியல் செய்திகள்
0
Kashi Tamil Sangamam | காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி.. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 16, 2025 7:50 AM IST

Kashi Tamil Sangamam | சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம், கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைப்பது இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளது.

News18News18
News18

உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளாவுக்கு மத்தியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கோலாகமாகத் தொடங்கியது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில். காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. இதன் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வரவேற்றார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி மங்களகரமாகத் தொடங்கியது. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.

முன்னதாக காசி தமிழ்ச் சங்கமம் புகைப்பட கண்காட்சியை எல்.முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதில் அகத்தியர்,  திருவள்ளுவர், அவ்வையார், ஆண்டாள், வள்ளலார், ஜி.டி.நாயுடு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உள்ளிட்டோரின் பங்களிப்பு தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், வாரணாசி போன்று தமிழ்நாட்டிலும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரித்தார்.

Also Read: சென்னை தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு – மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம், கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைப்பது இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோர், பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் செல்லவுள்ளனர்.

First Published :

February 16, 2025 7:42 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி.. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!



.

Previous Post

EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

Next Post

Tirunelveli Weather 17 February 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.38°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirunelveli Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.92°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Tirunelveli Weather 17 February 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.38°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In