சமீபத்திய தரவுகளின் படி, டெல்லிக்கு வரி மூலம் வரும் வருமானம் ரூ.57,750 கோடி ஆகும். ஆனால், டெல்லியின் மொத்த பட்ஜெட் தொகை ரூ.76,000 கோடி ஆகும்.
இப்போதிருக்கும் திட்டங்களேயே தொடர்ந்து செயல்படுத்த டெல்லி அரசுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வேண்டும். இதுபோக, கட்டமைப்புகள், திடீர் தேவைகள், புதிய திட்டங்களுக்கு இன்னமும் பணம் தேவைப்படும்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இப்போது பாஜக அளித்துள்ள பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதிக்கு மட்டும், ஆண்டுக்கு ரூ.11,000 கோடி தேவை.

இன்னும் உள்ள செலவுகள்…
யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ.8,000 கோடி;
மருத்துவமனைகளை புதுப்பிக்க ரூ.10,200 கோடி;
மெட்ரோ மூன்று மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்கு ரூ.2,700 கோடி
இப்படி பாஜக அரசின் ஒவ்வொரு வாக்குறுதிகளுக்கும் ஆயிரம் கோடி கணக்கில் பணம் தேவை.
குறைந்த அளவே டெல்லியின் வருமானம் இருக்கும் நிலையில், இந்த வாக்குறுதிகளுக்கு டெல்லி அரசு என்ன செய்யும்…மத்திய அரசின் உதவியை நாடுமா என்பதற்கான பதில் அடுத்த மாதம் தாக்கல் ஆக உள்ள டெல்லி பட்ஜெட்டில் விடை கிடைக்கும்.
