Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் நமன் விருதுகள் விழா நேற்று (பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது – சச்சின் டெண்டுல்கர்

பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிக்க: இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: எப்போதும் நீங்கள் விளையாடும் விளையாட்டுக்கு மதிப்பளியுங்கள். உங்களது விளையாட்டு மீது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அணிக்காக என்னால் மீண்டும் விளையாட முடியாது என்பதை எனது கடைசி நாள் ஆட்டத்தில் உணர்ந்தேன். அதனால், இந்திய அணிக்காக விளையாடும்போது, மகிழ்ச்சியுடன் அதனை அனுபவித்து விளையாடுங்கள் என்றார்.

. ..

He has given innumerable moments for cricket fans to celebrate and today we celebrate the Master

The legendary Mr. Sachin Tendulkar receives the prestigious award

Many congratulations… pic.twitter.com/C3lE7Cfdsd

— BCCI (@BCCI) February 1, 2025

Unplayable deliveries, unparalleled spells, unbelievable match-winning performances

ONE Player

Best International Cricketer – Men goes to none other than Jasprit Bumrah #NamanAwards | @Jaspritbumrah93 pic.twitter.com/cBslS0HA6S

— BCCI (@BCCI) February 1, 2025

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது – ஜஸ்பிரித் பும்ரா

கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர் நாயகன் விருதினையும் வென்றார்.

இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

சிறந்த வீராங்கனை விருது – ஸ்மிருதி மந்தனா

கடந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனைக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 743 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை விருதினை அண்மையில் வென்றார்.

Elegant and consistent as ever with the bat! ✨

A year filled with match-winning performances and record-breaking knocks!

Congratulations to #TeamIndia opener and vice-captain Smriti Mandhana who wins the Best International Cricketer – Women Award for the 4️⃣th time … pic.twitter.com/8M1qBzcZK6

— BCCI (@BCCI) February 1, 2025

பிசிசிஐ-ன் சிறப்பு விருது – ரவிச்சந்திரன் அஸ்வின்

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-ன் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

One of the finest all-rounders in international cricket with a career decorated with class, consistency and commitment!

Congratulations to Ravichandran Ashwin for winning the BCCI Special Award #NamanAwards | @ashwinravi99 pic.twitter.com/QNHx4TAkdo

— BCCI (@BCCI) February 1, 2025

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் 537 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள 8-வது வீரர் என்ற பெருமை அவரையேச் சேரும்.

சர்வதேச போட்டிகளில் சிறந்த அறிமுக வீரர் விருது – சர்ஃபராஸ் கான்

சர்வதேச போட்டிகளில் சிறந்த அறிமுக வீராங்கனை – ஆஷா சோபனா

ஒருநாள் போட்டிகள் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தீப்தி சர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்கான விருது – தனுஷ் கோட்டியான்

சிறந்த கிரிக்கெட் சங்கத்துக்கான விருது மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.

உள்ளூர் போட்டிகளுக்கான சிறந்த நடுவருக்கான விருது அக்‌ஷய் டோட்ரேவுக்கு வழங்கப்பட்டது.





.

Previous Post

Union Budget 2025: “தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்” – கேரள முதல்வர் காட்டம் | kerala cm Pinarayi vijayan condemns union budget 2025

Next Post

ECR: “அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்…” – காவல் துணை ஆணையர் விளக்கம் | police explain about chennai ECR rash driving and Threatening women viral video case investigation

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ECR: “அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்…” – காவல் துணை ஆணையர் விளக்கம் | police explain about chennai ECR rash driving and Threatening women viral video case investigation

ECR: "அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்..." - காவல் துணை ஆணையர் விளக்கம் | police explain about chennai ECR rash driving and Threatening women viral video case investigation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In