அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரையில் அயல்நாட்டுத் தலைவர்கள் யாருடனும் டிரம்ப் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் அயல்நாட்டு சந்திப்பாளராகவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அதுமட்டுமின்றி, முக்கியமான முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக சந்திப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்து, நெதன்யாகு கூறியதாவது, “அதிபராகப் பதவியேற்ற பிறகு ஓர் அயல்நாட்டு தலைவருடனான டிரம்ப்பின் முதல் சந்திப்பு என்னுடன்தான். இது இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணியின் வலிமைக்கு ஒரு சான்று என்று நினைக்கிறேன். மேலும், இது எங்கள் தனிப்பட்ட நட்பின் வலிமைக்கும் சான்றாகும்.
