Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" – அமித் ஷாவை சாடிய கார்கே; பாஜக-வின் ரியாக்சன் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 28, 2025
in அரசியல் செய்திகள்
0
“கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" – அமித் ஷாவை சாடிய கார்கே; பாஜக-வின் ரியாக்சன் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடியதைத் தொடர்த்து, “கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?” என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்திருப்பது பா.ஜ.க-விடமிருந்து கடும் விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது.

முன்னதாக, மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம், பிராகியராஜில் இன்று நடைபெற்ற ஆன்மிக விழாவில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கலந்துகொண்ட அமித் ஷா, கங்கையில் நீராடினார். அதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் அமித் ஷா, “புனிதமான திரிவேணி சங்கமத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமான ‘மகா கும்பமேளாவில்’, துறவிகள் முன்னிலையில் நீராடியதில் மனம் நிரம்பி வழிகிறது. அனைவரின் நலனுக்காகவும் கங்கா, யமுனா, சரஸ்வதி மாதாவைப் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா

மறுபக்கம், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா? அது உங்கள் வயிற்றை நிரப்பிடுமா? யாருடைய நம்பிக்கையையும் நான் கேள்விக்குட்படுத்த நான் விரும்பவில்லை. யாரேனும் மனது புண்பட்டால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நெருங்குகிறது பட்ஜெட்…
குவிகின்றன எதிர்பார்ப்புகள்…
நிதியமைச்சர் கிண்டும் ‘அல்வா’
இனிக்குமா?

ஆனால், பசியால் குழந்தைகள் சாகும்போதும், பள்ளிக்குச் செல்ல முடியாதபோதும், தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறமுடியாதபோதும், பாஜக தலைவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கங்கையில் நீராடுகிறார்கள். இதுபோன்றவர்களால், நாடு எந்தப் பலனும் அடையாது. 100 முறை பிறந்தாலும் சொர்க்கத்துக்குச் செல்ல முடியாத அளவுக்குப் பாவங்களைச் செய்திருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் துரோகிகள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து நீங்கள் விடுபட விரும்பினால், அரசியலமைப்பைப் பாதுகாத்து ஒற்றுமையாக இருங்கள்.” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மல்லிகார்ஜுன கார்கே

கார்கேவின் இத்தகையப் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றிய பா.ஜ.க எம்.பி சம்பித் பத்ரா, “இது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையின் மீதான தாக்குதல். கார்கே கூறியதைக் கேட்டு கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்திருக்கின்றனர். கங்கையில் நீராடினால் வறுமை நீங்குமா, மக்களுக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கிறார்கள்… இதையே, கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வேறு எந்த மதத்தினருக்கும் கூற முடியுமா? சனாதன தர்மத்திற்கு எதிரான இது போன்ற அறிக்கைகள் வெட்கக்கேடானது. சனாதன தர்மத்தின் மீதும், ஒட்டுமொத்த தேசத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்றார்.

‘ஐ.சி.யு-வில் இந்தியப் பொருளாதாரம்?’ – பிரதமர் மோடி ‘மௌன விரதம்’!



.

Previous Post

தூது போன 'இலை' தரப்பு வாரிசு, வெயிடிங்கில் வைத்த Amit Shah! | Elangovan Explains

Next Post

Vijay: ‘திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!’ – ஜெயக்குமார் பரபர| Ex Minister Jayakumar about Vijay

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vijay: ‘திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!’ – ஜெயக்குமார் பரபர| Ex Minister Jayakumar about Vijay

Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர| Ex Minister Jayakumar about Vijay

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In