Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vijay: ‘இந்தியா’ கூட்டணிக்கு விஜய்யை அழைக்கும் செல்வப்பெருந்தகை; பின்னணி என்ன? | Selvaperunthagai invites Vijay to India alliance what was the reason

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2025
in அரசியல் செய்திகள்
0
Vijay: ‘இந்தியா’ கூட்டணிக்கு விஜய்யை அழைக்கும் செல்வப்பெருந்தகை; பின்னணி என்ன? | Selvaperunthagai invites Vijay to India alliance what was the reason
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே எங்கும் இருக்கக் கூடாது என மிகத் தீவிரமாகக் களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை விஜய் நேரில் சந்திக்கிறார். அதற்குக் காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம். இதை ஏற்கனவே காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. மக்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இது குறித்து சட்டப்பேரவையிலும் பேசப்பட்டுள்ளது. இந்துத்துவா சக்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், இந்தியா கூட்டணிக்குத்தான் விஜய் வர வேண்டும். அதுதான் அவருக்கும், அவரது கொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது” என்றார்.

முன்னதாக த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், “கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும்தான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா? இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.



.

Previous Post

திருச்சி – மதுரை நான்குவழிச் சாலையை ஏலம் எடுக்கும் அதானி? | New Tax Bill | Imperfect Show

Next Post

‘நானே நேர்ல வரேன்’ அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில்!’- பரந்தூர் விசிட் பின்னணி! |Things behind Vijay’s Paranthur Visit

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நானே நேர்ல வரேன்’ அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில்!’- பரந்தூர் விசிட் பின்னணி! |Things behind Vijay’s Paranthur Visit

'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில்!'- பரந்தூர் விசிட் பின்னணி! |Things behind Vijay's Paranthur Visit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In